சனி, 23 அக்டோபர், 2010

கடனுக்கு மேல் கடன் அடுத்த ஆண்டு 99ஆயிரம் கோடி ரூபாய் கடன்!

  2011 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்ட துண்டு விழும் தொகையை ஈடுகட்ட அரசாங்கம் 99 ஆயிரத்து 700 கோடியை உள்நாடு, வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஆண்டிற்கான அரச செலவீனமாக ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 96 கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அதில் ஆகக் கூடுதலான தொகையான 21 ஆயிரத்து 522 கோடியும் அதற்கடுத்ததாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 7 ஆயிரத்து 525 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக அரசாங்க செலவீனங்களுக்கான உள்நாட்டு வருமானம் போதாத நிலையிலேயே அரசாங்கம் பாரியளவான தொகை யொன்றை கடனாகப் பெற முயற்சிக்கின்றது.

யுத்தத்துக்காக உலக நாடுகளிடம் வாங்கிய கடனையே இன்னும் அடைக்காத நிலையில் கடனுக்கு மேல் கடன் படுவதானது வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் பொருளாதார சுபீட்சத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக