கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள், விசவாயு பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம், புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிலவுவதாக த சிறிலங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் அடையாளம் தெரியாதிருக்கவும், கைதுக்கான ஆதாரங்களை இல்லாது செய்யவும் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையர்கள் என அண்மைக் காலமாக கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதாகின்றவர்கள் குறித்த தகவல்களை மறைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இந்த புதிய அணுகுமுறையை பின்பற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கைது செய்யப்படுகின்றவர்கள் பல்வேறு துன்புறுத்தல், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், அவர்களால் அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியாக சிக்கல் ஏற்படலாம் என்ற அடிப்படையில் அரசாங்கம் இவ்வாறு நச்சுவாயுவை கொண்டு அவர்களை எரித்து விடுவதாக ஸ்ரீலங்கன் காடியன் இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக