ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சிறிலங்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறை நடவடிக்கை.

“ பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் வழிகாட்டலில் வரையப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு அமைய, தென்பகுதியில் நிலை கொள்ளும் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

கிழக்குப் பகுதி முழுவதினதும் பாதுகாப்பை சிறப்பு அதிரடிப்படையிடம் இருந்து இராணுவம் பொறுப்பேற்கவுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இராணுவ டிவிசன் நிரந்தரமாக நிலைகொள்ளும்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக அம்பாந்தோட்டையில் முதலாவது இராணுவ டிவிசன் அமைக்கப்படும். இது 12வது டிவிசன் என்று அழைக்கப்படும்.

புதிய பாதுகாப்புச் சவால்களைச் சந்திப்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இந்தத் திட்டத்தின்படி எந்தவொரு நெருக்கடி நிலையையும் சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் காவல்துறையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தற்போது அரசாங்க மற்றும் தனியார் கட்டங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் இந்த வருட இறுதிக்குள் அங்கிருந்து வெளியேறி விடத் தீர்மானித்துள்ளனர்.

சீன அரசாங்கம் 981 ஆயத்த நிலைக் கட்டங்களை சிறிலங்கா இராணுவத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அவற்றைப் படையினர் அடுத்த வருடத் தொடக்கத்தில் பொருத்தியமைத்து விடுவர்.

சிறிலங்கா இராணுவம் வெளிநாட்டுப் படையினருக்கான பயிற்சிகளை அடுத்த வருடம் ஜனவரி 5ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

கொமாண்டோ பயிற்சிப் பாடசாலை, விசேட படைகள் அக்கடமி, குறிபார்த்துச் சுடுதல் பயிற்சிப் பாடசாலை, மாதுறு ஓயா பயிற்சி நிலையம் ஆகியவற்றில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். நான்கு குழுக்கள் இதற்காக அனுமதிக்கப்படவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பர் என்று எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக