மட்டக்களப்பு, துறைநீலாவனை வாவிக்கரையில் சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வெட்டிய பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
இன்று மாலை 6 மணியளவில் இவர்கள் 10 ஆமைகளை வெட்டி அதன் இறைச்சியினை எடுத்துக் கொண்டு சென்றபோதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் மொறட்டுவ பல்கலைகழகத்தையும், மற்றவர் கிழக்கு பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் நாளை மட்டக்களப்பு நீதவான் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மானவடு குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக