மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குடும்பத் தகராறில் வீடொன்று எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையிலான கைகலப்பின்போது துப்பாக்கி வெடித்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக