பொத்துவில் கிழக்கில் மூதுமகா விகாரை என்று ஒன்று இல்லை.அங்கு தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான சிலபொருட்கள் மாத்திரமே உண்டு.இல்லாத ஒன்றை இடிக்கச் சென்றதாக சிங்களப் பத்திரிகைகளில் படத்துடன் வெளியான செய்தி தவறானது.இதனை முற்றாக மறுப்பதாக பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பற்றி கருத்து வெளியிட்ட அவர் பொத்துவில் பிரதேசசபை தற்போது இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.அந்த வகையில் இந்த இடத்தின் சுற்றுச் சூழலில் காணப்பட்ட பற்றைக் காடுகளை அகற்றிச்சுத்தப்படுத்த மேற்கொண்ட முயற்சி அங்கு வந்த தேரர்களால் தடுக்கப்பட்டபோது ஏற்பட்ட முறுகல் நிலையை காவல் துறையின் உதவியுடன் உதவித்தவிசாளர் என்ற வகையில் அங்கு சென்றநான் சுமுகமாகத்தீர்த்து வைத்தேன்.
அங்கு சுத்தப்படுத்துவதற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணங்களைப் படம்பிடித்தே இல்லாத மூதுமகா விகாரையை இடிக்கச் சென்றதாக எனது படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.அதனை நான் முற்றாக மறுக்கின்றேன். அங்குள்ள தொல்பொருள் திணைக்களப்பொருட்கள் பாதுகாக்கப்படவேண்டும்.அதன் இருப்பையும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் எந்தவித கட்டிட நிர்மாணப்பணிகளும் அங்கு இடம்பெறக்கூடாது. அப்பொருட்களின் பராமரிப்பு பொத்துவில் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டுமென்று தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக