வெள்ளி, 12 நவம்பர், 2010

ராஜபக்சேவின் 2வது பதவிப் பிரமாண வைபவத்திற்கு சீனப் பிரதிநிதிக்கு அழைப்பு! இந்தியத் தரப்பில் இதுவரை எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை!!

மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் எதிர்வரும் 17ம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள போதிலும்   இந்த நிகழ்வில் இந்தியாவின் விசேட அரச பிரதிநிதியொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

சீன ஜனாதிபதியின் பிரதிநிதியாக சென் கூ ஓவே இலங்கைக்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ நேற்று (11) ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்

சீன தேசிய காங்கிரஸின் உபதலைவராக செயற்படும் சென் ஓவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வின் விருந்தினராக இம்மாதம் 20ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் திறப்பு விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளதாக சீன தூதரகத் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக