வெள்ளி, 12 நவம்பர், 2010

பேசலைப்பகுதியில் வெள்ளை வானில் வந்த சிறீலங்கா சிறப்பு படையினரால் ஐந்து தமிழர்கள் கைது

மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசலைப்பகுதியில் வெள்ளை வானில் வந்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை கொமொண்டோக்கள் ஐந்து தமிழ் மக்களை கைது செய்து கொண்டுசென்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று (11) அதிகாலை 3.00 மணியளவில் பொதுமக்களின் உடையில் வெள்ளை வானில் வந்த சிறீலங்கா படையினர் ஐந்து தமிழ் மக்களை கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரே இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் மாலை 4.30 மணியளவில் மீண்டும் மன்னாருக்கு கொண்டுவரப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும், படையினரின் முகாம்களில் வைத்து அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதற்கான காயங்கள் அவர்களில் காணப்படுவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு:

சந்தியா அருள்சீலன் மரியந்தா – குடும்பத்தலைவர்

செபஸ்ரியன் சீலன் குறுஸ் – ஆசிரியர்

செபஸ்ரியன் ஜெனிபர் குறுஸ் – குடும்பத்தலைவர்

சேவியர் பெனோ பெல்ரனோ – இளைஞர்

சந்தியாகோ மசன்ற் குறுஸ் – இளைஞர்

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கொண்டு செல்லவுள்ளதாக சிறீலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக