வெள்ளி, 12 நவம்பர், 2010

சிங்களம் காட்டில் சிங்கத்தின் விந்தில் தோன்றும் முன்பே கந்தரோடையில் தமிழினம் வரலாற்று படைத்து விட்டது ! - த.எதிர்மன்னசிங்கம்

வரலாறு படைத்து வந்த தமிழினத்துக்கு வரலாறு படிப்பிக்க முனையும் சிங்களம். வடக்கு கிழக்கு சிங்களவரின் தேசம் எனப் பொய் எழுதி தமிழரின் தனி நாட்டுக் கோரிக்கையை ஏளனம் செய்யும் சிங்களத்துக்கு வரலாற்றுப் பாடம் புகட்ட வேண்டும் புகலிடத் தமிழர். 

 2600 வருடங்களுக்கு முன் வந்த விஜயனின் பரம்பரை எனக் கூறும் சிங்களம் 3000 வருடங்களுக்கு முன்பே யாழ்ப்பாணம் கந்தரோடையில் நகர வாழ்க்கை உருவாக்கி வரலாறு படைத்த தமிழரை எப்படி நாடற்றவர் எனக் கூற முடியும்? இது கந்தரோடை அகழாய்வு எச்சங்களை 1970ல் ஆய்வு செய்து றேடியோ காபன் சீ.14 முறையில் காலக் கணிப்பீடு செய்த அமெரிக்கப் பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ரீதியான முடிவு.

 

Microlithic stone tools (circa 26,000 B.C.), from the Iranamadu formation.
Microlithic stone tools (circa 26,000 B.C.), from the Iranamadu formation.
2009ல் பலவித போர்க் குற்றங்களை இளைத்து ஆயிரக் கணக்கில் தமிழ்ப் பொது மக்களைப் படுகொலைகளை நிகழ்த்தித் தமிழின இழிப்பைச் செய்தது. சிங்கள இனவெறி தமிழரின் மத வழிபாட்டுத் தலங்களை அழித்து புத்த மத சின்னங்களை நிறுவியும் சிங்களக் குடியேற்றத்தை; செய்தும் இனச் சுத்திகரிப்பை இராணுவ ஆட்சி செய்து நடத்தி வருகிறது. எந்த விதப் போர்க் குற்றம் எதுவும் அரசோ அசை படைகளோ செய்ய வில்லை என அரச அதிபரைக் கொண்டே சொல்ல வைக்கிறது. மேலும் அனைத்துக் குற்றங்களையும் தமிழர் தரப்பில் போட்டு பாவ சாந்தி நடத்தி உலகத்தின் கண்களில் மண்ணைப் போடுகிறது.
அங்குள்ள மக்களை நிரந்தர அடிமைத் தளையில் அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் நிலையில் வைத்த படி தமிழரின் அரசியல் பிரச்சனைகளை முற்று முழுதாக மறுதலித்து அங்கே ஒரு பொருளாதார பிரச்சனை இருப்பதாக்கி அபிவிருத்தி என்ற மந்திரக் கோல் மூலம் தீர்வு காண்பதாக உலகுக்குக் காட்டுகிறது.
தமிழ் மக்களின் அவலங்களைப் பூதாகாரப் படுத்தி அதுவே முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தின் மூலம் புலத்தில் தமிழர் எடுத்து வரும் அரசியல் போராட்டத்தை ஆணி வேருடன் களையும் திட்டத்தில் இலங்கை அரசுகள் செயற் படுகின்றன. புலம் பெயர் தமிழருக்கு மூளைச் சலவை செய்து தமது தமிழ் இன அழிப்பை முழுமையாகச் செய்திட அவசரமும் அவசியமும் காட்டுகின்றன. இதற்கெனப் பலரும் எமது நுனை; காக்கும்; போதகர்களாக செயற்படும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
(படங்கள் கலாநிதி எஸ்யூ.தெரணியகல முன்னாள் இலங்கைத் தொல்லியலாய்வுத் திணைக்கள தலைமை இயக்குநர். ஆதாரம் புரண்ட்லைன்)
(படங்கள் கலாநிதி எஸ்யூ.தெரணியகல முன்னாள் இலங்கைத் தொல்லியலாய்வுத் திணைக்கள தலைமை இயக்குநர். ஆதாரம் புரண்ட்லைன்)
முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புலத்துத் தமிழர் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற புதப் பாடம் புகட்டச் சிலர் தொடங்கினர். அதன் நிமித்தம் யேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் த.தே.கூட்டமைப்பும் பின்னர் ஏனைய அரசியல் பிரமுகர்களும் தமது கடைகளை விரிக்கத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் அங்குள்ள மக்களின் துயர் துடைப்புப் பணி என்றே பல்லவி தொடங்கிப் பின்னர் தமது கட்சிகளுக்கு நிதியும் தொண்டரும் வேண்டும் எனக் கூறத் தவறவில்லை.
மக்கள் துயர் தடைப்பதாயின் முதலில் அதற்கான சுதந்திரமான சேவை செய்ய தொண்டர் நிறுவனங்களை அரசு அனுமதிக்க வகை செய்தல் வேண்டும். அதனைச் செய்யாது அரசின் முகவர்கள் மூலமே உதவி போக வேண்டும் என்ற கட்டுப் பாடும் அப்படிப் போகும் உதவிகளும் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில் புலம் பெயர் தமிழர் அள்ளிக் கொடுக்கும் அளவுக்கு அறிவிலிகளா?
ஆனால் அரசு தமிழரை அப்படித்தான் வைத்துப் பார்க்கிறது. கோயில்கள் திருவிழாக்கள் என்ற பேரால் பெருமளவு தமிழர் பணம் பாழடிக்க வைப்பதிலும் சிங்களம் வெற்றி கண்டு வருகிறது. யேர்மனியில் ஹம் ஆலாய விரிவாக்க வேலைகளை அங்குள்ள இலங்கைத் தூதுவர் ஊக்குவித்து வருவதும் அதனால் பெருமளவு பணம் பக்தியின் பெயரால் பாழாவதும் பரவசப் படும் பக்தர் கூட்டத்துக்கு மகிழ்வைத் தரலாம். ஆனால் தமிழர் வளம் இப்படிப் பயனற்ற முதலீடுகளால் என்ன பயன் அடையும்? முன்னாள் கத்தோலிக்க தேவாலயங்கள் இன்று தேடுவார் அற்றுப் போவது போல நளை இவையும் பாழடைந்து போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
Early Brahimi inscriptions on postherds from Anuradhapura Citadel, circa 600-500 B.C.
Early Brahimi inscriptions on postherds from Anuradhapura Citadel, circa 600-500 B.C.
ஆனாலும் எமது ஆலயங்கள் புலத்தில் பெருகுவது சிலரின் புகழுக்குத் தேவைப் படுகிறது. நிலத்தில் உள்ள ஆலயங்கள் பற்றிய கவலை அங்குள்ள மண்ணும் மக்களும் உள்ள நிலை அவற்றுக்குச் சர்வதேச அளவில் தீர்வு தேடும் அவசியமும் அவசரமும் எவருக்கும் ஏற்படக் காணோம்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பேருண்மை ஏன் எவருக்குமே நினைவுக்கு வர மறுக்கிறது? எமக்கிடையே சிறு சிறு காரணங்களுக்காக முட்டி மோதியதன் விளைவே இன்றைய மா பெரும் அழிவும் அவலமும் என்ற உண்மையை ஏன் ஏற்க மறுக்கிறோம்? இப்படியே காவடி ஆட்டம் கரகாட்டம் ஆடி சொர்க்கம் போய்விடலாம் என்ற சுயநலம் எப்படி ஏற்பட்டது?
சொர்கம் நரகம் பற்றி எமக்குப் போதித்து வந்த சொல் வேந்தர் சுகி சிவம் எமக்கு ஒரு சிதம்பர ரகசியத்தை நினைவு படுத்துகிறார். வீட்டை விட்டு நாட்டை விட்டு ஓடிவிட்ட புலம் பெயர் தமிழருக்கு ஏன் இன்னமும் அங்கே வீடும் காணியும் அவற்றை அங்கே உள்ளவரச்களுக்கே கொடுத்து விடச் சொல்லிப் போதிக்கிறார். இந்தியா கட்டிக் கொடுக்க உள்ள வீடுகளே சிங்களக் குடியேற்றத்துக்குப் போகப் போகிறது என்ற கொடுமை கூட அறியாது எமக்கு உபதேசம் செய்கிறார்.
அவரை இப்படிப் பேசவைத்தது அவரது ஆன்மீகமா? இந்திய மாநில மத்திய அரசா? ராவா? அல்லது மகிந்தவின் அன்பளிப்புகளா? இந்தியப் படைகளும் இலங்கைப் படையுடன் சேர்ந்து எம்மை எம் வீடுகளில் இருந்து விரட்டியதால் அன்றோ நாம் எமது உறவுகளையும் ஊரையும் விட்டு உயிர் காக்க வெளி நாடுகளுக்கு ஓடி வந்தோம்! யூத மக்கள் 2000 ம் ஆண்டுகளாகப் போராடித் தமது தாயகத்தைப் பெற முடிந்தால் நமக்கேன் தனித் தமிழீழம் சாத்தியப் படாது? மகிந்த அரசை ஏற்று அவர்களோடு சேர்ந்துதான் வாழ வேண்டும் என்று எமக்குப் போதிப்பதுதான் அவரது ஆன்மீகமா?
PHOTOS BY S.U. DERANIYAGALA Anuradhapura citadel, where artefacts belonging to the early Iron Age have been found re-excavation, 900 B.C
PHOTOS BY S.U. DERANIYAGALA Anuradhapura citadel, where artefacts belonging to the early Iron Age have been found re-excavation, 900 B.C
தெற்கே தேவேந்திர முனையில் திருத் தொண்டீசுவரம் தென் மேற்கே முன்னீசுவரம் மேற்கே திருக் கேதீசுவரம் வடக்கே நகுலேசுவரம் கிழக்கே திருக் கோணசுவரம் என இலங்கைத் தீவு அடங்களும் உள்ள சிவாலயங்கள் இன்று எமக்கு இல்லாமால் போன நிலை இந்தச் சிவத்துக்குமா தெரிய வில்லை? கதிர்காமக் கந்தன் நல்லைக் கந்தன் செல்வர் சந்நிதிக் கந்தன் தமிழரது இல்லை என்று ஆவதா? எங்கள் மூளையைச் சலவை செய்யும் திருப்பணியை இத்தோடு விடக் கேட்கிறோம்.
புலத்தில் இன்னொரு வகைப் போரை சிங்களம் வரலாற்றை மாற்றி எழுதி நடக்தத் தொடங்கி விட்டது. ஓரு புறம் திசைமகர கமை முதல் கிடைத்துள்ள கி.மு. 2ம் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கொண்ட மட்பாண்ட ஓடு அண்மையில் யெர்மானிய ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப் பட்டும் இன்று அப்படி எதுவும் கிடையாது என கொழும்பு சிங்கள அகழாய்வுத் திணைக்களம் மறுதலிக்கிறது.
இவை போன்ற மனித எச்சங்கள் கி.மு. 1000 காலப் பழமையானவை அநுராத புரத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன. வன்னி மன்னார் முல்லைத்தீவு பூநகரி நெடுந்தீவு ஆனைக் கோட்டை சுன்னாகம் என விஜயன் காலத்துக்கு முற்பட்ட ஆதாரங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டதும், ஆவணப்படுத்தப்படாதும் சிங்களத்தால் அழிக்கப்பட்டும் உள்ளன.
நுவரெலியா ஒட்டன் வெளியில் 17000 வருடங்களுக்கு முந்திய மனித குடியிருப்புகள் பயிர் செய்கை வீட்டு மிருக வளர்ப்பு இருந்தமைக்கான ஆதாரங்களை சிங்கள விஞ்ஞானியான கலாநிதி ரீ.ஆர். பிரேமதிலகா தமது ஆய்வுகள் மூலம் பட்டியலிட்டு உள்ளதாக முன்னாள் இலங்கைத் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத் தலைமை இயக்குநர் கலாநிதி எஸ்.யூ.தெரணிய கல 2004ல் சென்னையில் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
மேலும் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள மண் படிவங்களில் கி.மு. 3 இலட்சம் வருடங்களுக்கு முந்தைய மனித எச்சத் தடையங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் திரு தெரணியகல கூறியுள்ளார்.
Costal gravels and ren sands with stone tools, Iranamadu formation in Sri Lanka, (circa 300,000 B.C.)
Costal gravels and ren sands with stone tools, Iranamadu formation in Sri Lanka, (circa 300,000 B.C.)
இரணைமடு மண்படை அகழாய்வுத் தளம் மேலேயும் அங்கு கிடைக்கப் பெற்ற கற்காலக் கருவிகளின் படங்கள் கீழேயும் உள்ளன. (படங்கள் கலாநிதி எஸ்யூ.தெரணியகல முன்னாள் இலங்கைத் தொல்லியலாய்வுத் திணைக்கள தலைமை இயக்குநர். ஆதாரம் புரண்ட்லைன்)
ஆனால் இன்று புலிகள் அழிக்கப்பட்டு நிலத்தில் தமிழர் நிலை தலை கீழாகி விட்டதால் புலத்திலும் தமிழரை கருத்தியல் ரீதியாக அழித்து வீழ்த்தப் பொய்யான வரலாற்றை புதிதாக எழுதி ஒரு இணையத் தளத்தை சிங்களம் உலவ விட்டுள்ளது. இவை எல்லாம் பொய் எனக் கூறியும்
போர்த்துக் கேயர் காலத்து வரலாற்றைத் தமிழரின் வரலாற்றுத் தொடக்கம் எனவும் வடக்கு கிழக்கில் அக்காலத்தின் இடப் பெயர்கள் எல்லாம் சிங்களம் எனவும் அங்கு பௌத்த சிங்களவரே இருந்கனர் அவர்களை இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழர் இந்துக்களாக மாற்றி விட்டனர் எனவும் புத்தி கெட்டுப் புலத்தில் வாழும் தமிழர் தமிழீழத் தாயகம் பற்றிப் பித்தலாட்டம் செய்கின்றனர் எனவும் கூறுகிறது.
இன்று இலங்கை இந்திய அரசுகளின் போர் முனைப்பு தமிழரின் தனி நாட்டுக் கோரிககையை அடியோடு தகர்த்து விடுவதே. இதனைப் புலம் வாழ் தமிழினம் உணர மறுத்து தனக்குள் பேதங்களை உருவாக்கி வளர்த்து முட்டி மோதிக் கொள்வதால் நிலத்தில் அழிவது போன்றே புலத்திலும் அழிவுக்கு வழி தேடும் நிலை மாற வேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றே தமிழினத்தின் ஓரே தெரிவாகக் கொண்டு சர்வதேச ஆதரவுடன் வெற்றி காண முடியும். கரணம் தப்பினால் மரணம் என்பது தமிழ் இனத்தின் இன்றைய நிலையாக உள்ளது. தமிழினம் தெளிந்து செயற்படுமா?
(இக்கட்டுரையின் தொல்லியல் தரவுகள் படங்கள் புரண்ட் லைன் இதழ் 21 12-18 ஜூன் 2004ல் இருந்து நன்றியுடன் பெறப் பட்டவைவ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக