வியாழன், 11 நவம்பர், 2010

ஹிட்லரின் சகோதரியின் கடைசித் தகவலும் சிந்தனையும்.

சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரின் சகோதரி பவுலா ஹிட்லர் 2ம் உலகப் போர் முடிவடைந்தவுடன் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரைக் கைது செய்த அமெரிக்கர்கள் உடனடியாக விடுதலையும் செய்தார்கள். அதற்குக் காரணம் ஹிட்லரின் சகோதரி அவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவரை என்றுமே சந்திக்க முடியாத நிலையில் இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஹிட்லரின் மானிடப் படுகொலைகள் பற்றியோ, புதைகுழிகள் பற்றியோ சகோதரிக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இதன் காரணமாக உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். மேலும் ஹிட்லர் மீது பாசம் கொண்டவராக இருந்த சகோதரி புவுலா 1960 ல் இறப்பதற்கு முன்னர் ஒரேயொரு தடவை மட்டும் தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்கியிருந்தார். அப்போது அவர் கூறிய விடயம், இளம் வயதிலேயே ஹிட்லர் ஒரு கட்டிடக்கலைஞனாக வருவதற்கு விரும்பினார். அந்த வழியில் அவர் சென்றிருந்தால் இத்தனை மானிடப் பேரவலங்களையும் அவர் நிகழ்த்தியிருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

01. விரும்பிய கல்விக்கு பிள்ளைகள் போகாது தடுக்கப்படும்போது அவர்கள் சமுதாயத்திற்கே பேரிடராக வருவார்கள்.

02. ஒருவர் செய்த குற்றத்திற்காக அவருடைய சகோதரர்களையும் பழி வாங்குவது போரைவிட மோசமான குற்றச் செயலாக அமையும் என்பதை உணர்ந்து அமெரிக்க இராணுவம் பவுலா ஹிட்லரை எதுவுமே செய்யாதது அவதானிக்கத்தக்கது.

ஆதாரம் : வரலாறு டேனிஸ் சஞ்சிகை நவம்பர் 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக