வியாழன், 11 நவம்பர், 2010

“தலைவன் இருக்கின்றான்” அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

தனது அடுத்த படம் தலைவன் இருக்கின்றான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன். கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படம் “தலைவன் இருக்கின்றான் என அறிவித்துள்ளார் கமல்.

இந்தப் படத்தை தானெ இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல மலையாள நாளிதழுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், “இப்போது எனது அடுத்த படத்தின் திரைக்கதை வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதலில் தலைவன் இருக்கிறான் என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி தலைவன் இருக்கின்றான் என்பதுதான் சரியானது. இது ஒரு பெரிய பட்ஜெட் படம். அனைத்துலக சமூகத்தைப் பற்றியதானது இந்தப் படம் தான் இப்போது என் மனதை ஆக்கிரமித்துள்ளது. இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக