கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் 1,300 ஏக்கர் நிலத்தை மகிந்தா ராஜபக்சாவின் குடும்ப உறுப்பினர்கள் கையகப்படுத்தியுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் நிலத்தை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.
முறுகண்டி, சாந்திபுரம் மற்றும் இந்துபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் 1,300 ஏக்கர் நிலத்தையே தென்னிலங்கை அரசு இவ்வாறு பலவந்தமாக கையகப்படுத்தியுள்ளது.
தம்மால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு காட்டுப்பகுதிகளில் உள்ள நிலங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பிள்ளது.
ஆனால் தமது நிலத்தில் தாம் 40 வருடங்களாக வாழ்ந்து வந்ததாகவும், தம்மால் காட்டுப்பகுதியில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது எனவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
போரின் போது தமது பொருட்கள் அனைத்தும் இழக்கப்பட்டுள்ள நிலையில், நிலத்தையும் இழக்க தாம் விரும்பவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக