ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட இளம் தமிழ் யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் அண்மையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட இளம் தமிழ் யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.பரமலிங்கம் சுபாஷினி என்ற 18 வயதான இந்தப் பெண் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போய் விட்டார் என அவரது உறவினர்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.இருப்பினும் குறிப்பிட்ட யுவதியைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் கைகூடாத நிலையில் அவர் சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். இந்த இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைகள் அடுத்த மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக