கிளிநொச்சிக்கும் அக்கராயனுக்கும் இடையில் மக்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேரூந்து சாரதி ஒருவர் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றதில் அக்கராயனில் பதற்றம் எழுந்தது. கடும் சிரமங்களின் மத்தியில் கடமை புரியும் சாரதியை தாக்கியதாக சம்பவத்திற்கு அந்தப் பகுதியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இன்று மாலை கிளிநொச்சியிலிருந்து அக்கராயனுக்கு மக்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஸ்கந்தபுரம் சந்தியில் உள்ள தனது இராணுவ முகாமின் முன்பாக தன்னை இறக்க வேண்டும் என்று அந்த சிப்பாய் குறிப்பிட்ட பொழுது பேரூந்து நிறுத்த அனுமதியற்ற இடம் என்பதனால் 25 மீற்றர் தூரம் சென்ற பின்னர் பேரூந்து நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த இராணுவச் சிப்பாய் தனது வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று கூறி குறித்த பேரூந்தின் சாரதியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்தப் பேரூந்தும் அதனை தொடர்ந்து வந்த பேரூந்துகளும் நிறுத்தப்பட்டு இராணுவத்தினருடன் தர்க்கம் நீடித்து மக்கள் எதிர்ப்பைக் காட்டிய பொழுது ஸ்கந்தபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
கிளிநொச்சி முதல் அக்கராயன் வரை மிகவும் பாதிப்படைந்த வீதிகளால் மக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை ஆற்றி வரும் பேரூந்துகள் மீது பயணம் செய்யும் இராணுவத்தினர் தொடர்ந்தும் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக