இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மூன்று தமிழக மீனவர்கள் காயமுற்றனர் என்று சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச்சம்பவம் நேற்று நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக இராமேஸ்வர மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான அந்தோனிதாஸ் மற்றும் அல்பேட் ஆகிய மீனவர்கள், அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளனர்.தாம் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் தம்மைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் தமது படகுகளுக்கும் சேதம் விளைவித்தனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் திம்புவில் இரண்டு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பின் போது குறித்த மீனவர்கள் மீதான தாக்குதல் விடயம் முக்கியத்தும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்தவாரம், இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினார்.
இதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக