செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கை போர்க்குற்ற விசாரணை வீடீயோ கான்பரன்சிங் முறையிலாம்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஐ.நா. நிபுணர் குழு,வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக தெரியவருகின்றது

தொடக்கத்தில் ஐ.நா. நிபுணர் குழு,இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போதிலும்,அதில் ஏற்பட்ட சில இடையூறுகளையடுத்தே மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளது.

வீடீயோ கான்பரன்சிங் முறையில் மற்றும் எழுத்து வடிவிலான விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலம் பலரையும் நோ்காணலுக்கு உட்படுத்த முடியும் என்று நிபுணர் குழு கருதுவதாக தெரிய வருகின்றது.

அவ்வாறான நிலையில் வீடீயோ கான்பரன்சிங் மூலமான விசாரணையின் மூலம் போதுமான சாட்சியங்களை முன்வைப்பதற்கோ,சாட்சியங்களை விசாரணைக்குட்படுத்தவோ போதுமான அவகாசம் கிடைக்கப் போவதில்லை என்று பலரும் குற்றம்சாற்றுகின்றனர்.

எனவே ஐ.நா. நிபுணர் குழுவின் விசாரணை,வெறும் கண்துடைப்பாக மட்டுமே அமையும் என்று பலதரப்பிலும் சுட்டிக்காட்டப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக