விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற மனிதாபிமானக் குற்றங்கள் தொடர்பாக நம்பகமான அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது.








முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னர் தூங்கிக் கொண்டு இருந்த தமிழனத்தை விழிப்படையவைத்திருக்கின்றது. ராசீவ்காந்தி என்ற ஒற்றை உயிரிழப்பினை வைத்து தாய்த் தமிழகத்தை தொப்புள்கொடி உறவுகளிடம் இருந்து பிரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் எல்லாம் மே-18 2009 ற்கு பின்னர் தோல்வியடைந்துவிட்டதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரப் பதாதைகள்.





